சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் உடன் நடிக்க அத்தனை நடிகைகளும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். லட்சுமி மேனனோ அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு வந்தபோது மறுக்காமல் நடித்தார். அந்தளவுக்கு நடிகைகள் மத்தியில் அஜித் மீது மயக்கம் இருக்கிறது.
இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிக தைரியமாக வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சாய்பல்லவி. ப்ரேமம் மலையாளப் படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானவர் சாய் பல்லவி. அப்படம் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் இயக்குநர்களும் சாய் பல்லவியை தங்களது படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள்.
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் கதாநாயகி வேடத்துக்கு முதலில் அழைக்கப்பட்டவர் அவர்தான். தனக்கு அந்த கேரக்டர் செட்டாகாது என்பதால், பின்னர் அப்படத்தில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சிவா - அஜித் இணையும் படத்தின் வாய்ப்பையும் தற்போது தவிர்த்திருக்கிறார் சாய்பல்லவி.
அஜித் படத்துக்காக சிவா அணுகிய சில தினங்களுக்கு முன்பு தான், தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சாய் பல்லவி. அதே தேதிகளை அஜித் படத்துக்கு சிவாவும் கேட்டிருக்கிறார். அஜித் படத்தை மிஸ் பண்ணுவதா என்றெல்லாம் யோசிக்காமல் ஸாரி டேட் இல்லை என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்.