பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், இப்படத்தின் டீஸர் வெளியிட உள்ளனர். அதையடுத்து பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ரெமோ படத்தை அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துவிட்டது.
இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தனது 2ஆவது தயாரிப்பாக மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தை தொடங்கியது. சிவகார்த்திகேயன் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.