சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தாமிரபரணி படத்தில் நடித்ததால் தாமிரபரணி பானு என்று அழைப்படும் நடிகை பானு பியூட்டி பார்லர் திறந்திருக்கிறார். நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானுவும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதனால் தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் ஸ்டுடியோ ரிவைவ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளேன். அழகுக்கலை குறித்து படித்துள்ள என் அம்மாதான் அதை நிர்வகிக்கப் போகிறார். சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் கஷ்டம்தான். எனவேதான் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து, பியூட்டி பார்லரை திறந்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது, என்றார்.