சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'ரசிகர் மன்றமே வேண்டாம்' என்ற முடிவுடன் இருக்கிறார் விஜயசேதுபதி. ஒரு படம் ஹிட் கொடுத்ததுமே, அடியாட்கள், ரசிகர் மன்றங்கள் என, அலப்பறையை கொடுப்பவர்களுக்கு மத்தியில், விஜயசேதுபதியின் இந்த முடிவு, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், தன் குருநாதர் சீனு ராமசாமியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப, 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை மட்டும், பணிவுடன் ஏற்றுள்ளாராம். இதன் எதிரொலியாகவே, தர்மதுரை படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில், 'மக்கள் செல்வன் விஜயசேதுபதி' நடிக்கும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளனவாம். அடுத்தடுத்து, முன்னணி நடிகையருடன் ஜோடி சேருவதால், சக நடிகர்கள், விஜயசேதுபதி மீது, சற்று பொறாமையுடன் இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது.