சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' படத்தை தயாரித்த கெனன்யா மூவீஸ், தற்போது தினேஷ், நந்திதா, பால சரவணன், ஜான் விஜய் நடிப்பில் 'உள்குத்து' படத்தை தயாரித்துள்ளது. 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கி உள்ளார். கே.எல்.பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்க்கை கதை களத்தில் உருவாகி உள்ள காமெடி படம்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமத்தை அபி அண்ட் அபி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதுகுறித்து அதன் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன் கூறியதாவது:
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ற படங்களை வழங்குவது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் உள்குத்து திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும் படமாக அமையும் என நம்புகிறேன். அதிரடி கலந்த கமர்ஷியல் படமாக உருவெடுத்திருக்கும் உள்குத்து படத்தில் நகைச்சுவைக்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது. குடும்பத்தோடு கண்டுகளிக்கும் அற்புதமான படைப்பாக மட்டுமில்லாமல், சிறந்த வெற்றி படத்திற்கான அனைத்து குணாதியசங்களும் உள்குத்து திரைப்படத்தில் இருக்கிறது. உள்குத்து படத்தின் டீசரை ஜூலை முதல் வாரத்திலும், பாடல்களை ஜூலை மூன்றாவது வாரத்திலும் வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் அபினேஷ் இளங்கோவன்.