சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜெயம் ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கியவர் சக்தி சௌந்தர் ராஜன். இவரது இயக்கத்தில் 'மிருதன்' படத்தில் நடித்த 'ஜெயம்' ரவி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே அரசல்புரசலாக வெளியாகியிருந்தன!
தற்போது சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம்ரவியை வைத்து அவர் அடுத்து இயக்க உள்ளது ஃபேன்டசி ரக படமாம்! இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார்?
'மீகாமன்' படம் உட்பட பல படங்களை தயாரித்த நேமி சந்த் ஜபக் மற்றும் ஹிதேஷ் ஜபக் ஆகியோர்தான் 'ஜெயம், ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார்களாம்! தற்போது 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் 'போகன்' படத்தில் நடித்து வருகிறார் 'ஜெயம்'ரவி.
இந்தப் படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு அதற்கடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். ஏற்கனவே வரிசையாக படங்களை கமிட் செய்து வைத்திருப்பதால், இந்தப்படங்களை முடித்துவிட்டுத்தான், சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படத்தில் 'ஜெயம்' ரவி இணைவார். எப்போது என்பது குறித்து உறுதியான தகவல் இப்போதைக்கு இல்லை.