சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் முயற்சியில் பெண் இயக்குநர் உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‛ராஜா மந்திரி'. சுசீந்திரனுடன் 'பாண்டிய நாடு', 'ஜீவா' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இவர்.
கலையரசன், காளி வெங்கட் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக ஸோயா, வைஷாலி நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தான் விரும்பும் பெண்ணையை தம்பியும் விரும்புவது அறிந்ததும் தன் காதலை அண்ணன் தியாகம் செய்வதுதான் ராஜா மந்திரி படத்தின் கதை.
ஃபர்ஸ்ட் காப்பி தயாராகி, பல மாதங்களாகிவிட்ட நிலையில் இப்படத்துக்கு ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டன. பிறகு தியேட்டர்கள் கிடைக்காமல்போனதால் ரிலீசாகாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இந்நிலையில் 'ராஜா மந்திரி' இம்மாதம் 24ஆம் தேதிரிலீசாக இருப்பதாக தகவல். இது ஹேஸ்யம் அல்ல, 'ராஜா மந்திரி' ரிலீஸ் குறித்து அப்படத்தின் இயக்குனர் உஷா கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல்தான். ராஜா மந்திரி படம் வெற்றியடைந்தால் இறுதிசுற்று சுதாவைப்போல் ஹிட் கொடுத்த பெண் இயக்குனர்கள் வரிசையில் உஷா கிருஷ்ணனும் இடம் பிடித்து விடுவார்.