‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கேரளா, ஆந்திரா, மும்பையைப்போலவே பெங்களூரில் இருந்தும் அவ்வப்போது தமிழ் சினிமாவுக்கு கதாநாயகிகள் இறக்குமதியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது இறக்குமதியாகியிருக்கும் ஒரு நடிகைதான் நைனா சர்வார். இவர், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதுதான் தமிழில் முதல் படம் என்றாலும் தட்டுத் தடுமாறி தமிழிலும் பேசுகிறார் நைனா சர்வார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, அட்ரா மச்சான் விசிலு படத்தில் நடித்தது ரொம்ப நல்ல அனுபவம். இந்த படத்தில் நான் மதுரை பொண்ணாக நடித்துள் ளேன். அதோடு, சுத்தமாக தமிழே தெரியாமல் நடிக்க வந்த நான், இந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள் ஓரளவு தமிழ் பேச கற்றுக்கொண்டேன். இந்த பட யூனிட்டில் உள்ளவர்கள் என்னிடம் அன்போடு பழகியதோடு எனக்கு தமிழும் கற்றுக்கொடுத்தார்கள்.
மேலும், இப்படத்தின் டைரக்டர் திரைவண்ணனுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு தமிழ் தெரியாது என்பதால், எங்கள் இருவருக்குமிடையே மிர்ச்சி சிவாதான் பாலமாக இருந்தார். பல வசனங்களை அவர்தான் ஆங்கிலத்தில் எனக்கு புரிய வைத்தார். அதேசமயம் டைரக்டர் திரைவண்ணன் தமிழிலேயே என்னிடம் பேசியதால், முதலில் குழப்பமாக இருந்தபோதும் பின்னர் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர் பேசியதை வைத்தே தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் பேசத் தொடங்கினேன்.
இந்த படம், காமெடி, காதல், செண்டிமென்ட் என எல்லா அம்சங்களும் கொண்ட படம். அதோடு ஒரு நல்ல மெசேஜூம் உள்ளது. முக்கியமாக இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம். இப்படியொரு நல்ல படத்தில் நடித்துள்ள நான், இதையடுத்து கொளஞ்சி என்றொரு படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறேன். அந்த படமும் விரைவில் வெளியாகியிருக்கிறது. ஆக, தமிழில் நடித்த முதல் படம் வெளியாவதற்கு முன்பே எனக்கு இரண்டாவது படம் ஒப்பந்தமாகிவிட்டது. அதனால் தமிழில் நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உணர்கிறேன் என்கிறார் நைனா சர்வார்.