சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை சரியில்லை என்று சொன்னாளாம் என்று கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். அதைப்போல, ரிலீஸ் ஆகி படம் தோல்வியடைந்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த படத்தில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக, சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை, அதனால் தான் தன்னுடைய படம் தோல்வியடைந்தது என்றும் சொல்வார்கள்.
அண்மையில் தன் மகனை வைத்து என்னுள் ஆயிரம் என்ற படத்தைத் தயாரித்த டெல்லி கணேஷ் கூட அவரது படம் ஓடாமல் போனதற்கு தியேட்டர்கள் மீதுதான் பழியைப் போட்டார். 'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம்', 'போடி நாயக்கனூர் கணேசன்', 'திருத்தம்' போன்ற படங்களில் நடித்தவர் டான்ஷ் மாஸ்டர் ஹரிகுமார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடைந்ததில்லை.ஆனால் எப்படியோ தொடர்ந்து ஏதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஹரிகுமார் இரண்டு வேடங்களில் நடித்த படம் 'காதல் அகதீ'. இப்படம் சில வாரங்களுக்கு முன் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் ஓடவில்லை. இந்நிலையில், “சரியான திரையரங்குகள் அமையாததாலும், கால சூழ்நிலை சரியாக அமையாததாலும் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருந்து படத்தை திரும்ப பெற்றோம்.” என்று காரணம் சொல்லி தற்பொழுது காதல் அகதீ படத்தை 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.