சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யா ட்விட்டரில் இணைந்தார். அவரது வழியில் இன்று அவரது தம்பியான கார்த்தியும் ட்விட்டரில் இணைந்துள்ளார். ஏற்கெனவே ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து வருகிறார் கார்த்தி. ஆனால் என்ன காரணத்தினாலோ டுவிட்டர் பக்கம் அவர் வரவே இல்லை. அதை பயன்படுத்தி அவரது பெயரில் போலி அக்கவுண்ட்டுகள் பல முளைத்துவிட்டன.
இந்நிலையில் இன்று தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தை தொடங்கியுள்ளார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (25.05.2016) கார்த்தியின் பிறந்த நாள்! தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். கார்த்தி தற்போது நடித்து வரும் படம் 'காஷ்மோரா'. கார்த்தியின் பிறந்த நாளையொட்டி காஷ்மோரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் கார்த்தி.