சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்த '24' படம் தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால், இதே போன்ற டைம் மிஷின் கதை கொண்ட 'இன்று நேற்று நாளை' நகைச்சுவையுடனும், ரசிக்கும்படியாகவும் ஏற்கெனவே வந்தது '24' படத்திற்கு வில்லனாக அமைந்துவிட்டது. அந்தப் படத்துடன் '24' படத்தை ஒப்பிட்டுப் பார்த்து கருத்துக்கள் வெளிவர '24' பெரிய அளவில் ரசிகர்களைக் கவராமல் போய்விட்டது. ஆனால், தமிழில் ஏமாற்றினாலும் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
அது மட்டுமல்ல இந்தப் படம் அமெரிக்காவில் சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை சூர்யா நடித்து வெளிவந்த படங்களிலேயே அமெரிக்காவில் அதிக வசூலை அள்ளிய படம் என்ற பெருமையையும் பெற்றது. 'தெறி' படத்திற்குப் பிறகு '24' படமும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாதம் ஒரு தமிழ்ப் படமாவது அமெரிக்காவில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அடுத்து 'கபாலி' படம் அந்த வசூலை எல்லாம் தாண்டப் போவது உறுதி. அதற்குள் வேறு எந்தப் படமாவது இந்த சாதனையைப் புரியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.