சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
புல்லுக்கட்டு முத்தம்மா படத்தை இயக்கியவர் சி.ஆர்.முத்துப்பாண்டி. மலையாள நடிகை மினுகுரியன் இந்த படத்தில் புல்லுக்கட்டு முத்தம்மாவாக நடித்திருந்தார். அதனால் அதன்பிறகும் கதாநாயகியை மையமாக வைத்து கோடம்பாக்கம் கோகிலா என்றொரு படத்தை இயக்கியுள்ளார் முத்துப்பாண்டி. சினிமா ஆசையில் கோடம்பாக்கத்துக்கு வரும் ஒரு இளம் பெண் சந்திக்கிற பிரச்சினைதான் இந்த படம்.
இப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில், தணிக்கை சான்று பெறுவதற்காக சமீபத்தில் அப்படம் திரையிடப்பட்டதாம். ஆனால், படத்தில் நிறைய கிளாமர் காட்சிகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய தணிக்கைக்குழு அதிகாரிகள், அவற்றை கத்தரித்து விட்டு வருமாறு கூறினார்களாம். இதையடுத்து அந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டு மறுபடியும் இப்போது சென்சார்போர்டு அதிகாரிகள் பார்த்திருக்கிறார்களாம். இருப்பினும், கோடம்பாக்கம் கோகிலாவுக்கு ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்கிறார்கள்.