சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடாவிட்டாலும் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. தற்போது விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கி உள்ள மருது படத்தில், டெரர் வில்லனாக நடித்துள்ளார். அடுத்து முத்தையாவின் உதவியாளர் பிரேம் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள தர்மதுரை படத்தை தயாரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிப்பு, படம் தயாரிப்பு இரண்டையும் தொடர்ந்து செய்வேன். நான் தயாரிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன். தர்மதுரை படத்தில் இயக்குனர் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டற்காக ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளேன். இனி நடிக்க மாட்டேன். அடுத்து நான் ஹீரோவாக நடித்தாலும் நெகட்டிவ் ஹீரோதான். மெல்ல மெல்ல மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகு பாசிட்டிவ் ஹீரோவாக நடிப்பேன். என்கிறார் சுரேஷ்.