சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ராணா பெங்களூர் டேய்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது ராணா பாகுபலி 2, கஷி போன்ற படங்களில் பிசியாகவுள்ளர். அண்மையில் நடைபெற்ற விஷாலின் மருது படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ராணா கலந்து கொண்டார். விழாவில் பேசிய விஷால், ராணா தமிழக மழை வெள்ளத்தின் போது சென்னை மக்களுக்கு செய்து உதவிகள் குறித்துக் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டி நடைபெற்ற நட்சத்திர கிரிகெட் போட்டியில் வெங்கடேஷ் கலந்து கொண்டதற்கு விஷால் நன்றி தெரிவித்தார். மேலும் ராணாவை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சேருமாறு விஷால் கேட்டதாகவும் உடனடியாக அதனை ஏற்றுக் கொண்ட ராணா ரூ 2 லட்சம் செலுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் விஷால் கூறினார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஸ்ரீதிவ்யா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் மருது என்ற பெயரில் தமிழிலும் ராய்டு என்ற பெயரில் தெலுங்கிலும் திரைக்கு வருகின்றது.