சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'வேதாளம்' படத்தின் அபரிமிதமாக வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை 3வது முறையாக இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் சிவா. சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை இயக்க சிவாவுக்கு ஆறு கோடி சம்பளம் என்ற தகவல் அடிபடுகிறது. வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்திரனே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.
அஜித்தே அனிருத்தை சிபாரிசு செய்ததினால் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுப்பதைத் தவிர தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை. அந்தவகையில் அனிருத்துக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் வியாழன் அன்று அஜித் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதால் இப்படத்தின் கதாநாயகிகளை இறுதி செய்யும் பணியில் மும்மமுரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே அனுஷ்கா, தமன்னா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் அடிபட்டு வருகிறது. இப்போது அந்தப் பட்டியலில் புதிய இணைப்பாக இன்னொரு பிரபல நடிகையும் இணைந்துள்ளார்.
அவர் வேறு யாருமல்.... எமி ஜாக்சன்தான். 'தெறி' படத்திற்குப் பிறகு தற்போது ரஜினி உடன் 'எந்திரன்' 2ஆம் பாகமாக 2.0 படத்தில் நடித்து வருகிறார் எமி. இந்நிலையில் ரஜினிக்கு அடுத்தநிலையில் உள்ள ஹீரோவாக உள்ள அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க 'இறுதிச்சுற்று' புகழ் ரித்திகா சிங்கும் நடிக்கப் போவதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.