பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா |
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ''கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா...” என்ற ஒரு பாடல் வருகிறது. இது முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது. நைட் எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டும் இன்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமிக்க வைத்துவிட்டார்களாம்.
ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடலாகும். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார், ஆனால், இந்த படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போட்டதால், ஹீரோ ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.