சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படத்தில் அறிமுகமானவர் சார்லி. காமெடி, குணசித்ர வேடங்களில் இப்போதுவரை நடித்து வரும் அவரை இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் காமெடி வேடங்களில் அதிகமாக நடித்து வந்த சார்லி, சமீபகாலமாக குணசித்ர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அந்தவகையில், தேசிங்கு ராஜா, ஜீவா, பாபநாசம், கிருமி, ஆறாது சினம் படங்களில் குணசித்ர நடிகராக தனது புதிய ரவுண்டை ஆரம்பித்துள்ளார் சார்லி.
இந்த நிலையில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு -என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அப்பாவாக நடித்துள்ளார் சார்லி. அவரது மனைவியாக நிரோஷா நடித்திருக்கிறார். காமெடியன் என்பதில் இருந்து முழுவதுமாக விடுபட்டு, மனதை தொடும் வகையில் சில செண்டிமென்ட் வேடங்களில் நடித்துள்ளார் சார்லி. அந்த காட்சிகளில் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதேபோல் மாஜி ஹீரோயின் நிரோஷாவும் அம்மா வேடத்தில் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம்.