சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. ஆனால் அதற்கடுத்த படத்திலேயே சூர்யாவுக்கு ஜோடியாக மெளனம் பேசியதே படத்தில் நாயகியாகி விட்டார். அதையடுத்து விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக தயாரான திரிஷாவின் திருமணம் தடைபட்டதால் மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும், தொடர்ந்து கதாநாயகி என்பதில் இருந்து விடுபட்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள திரிஷா, கொடியில் ஒரு அதிரடியான ரோலில் நடித்து ஆக்சன் ஹீரோயினுக்கே உரிய தொனியில் மிடுக்காக நடித்திருக்கிறாராம். அவர் நடந்து வரும் தோரணை, தில்லான பேச்சு ஆகியவற்றைப் பார்த்து அசந்து போன தனுஷே பலமுறை ஸ்பாட்டில் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார். அந்த அளவுக்கு கொடி படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு தன்னை முழுசாக மாற்றி மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம் திரிஷா