சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நெல்லையில் நடிகர் விஜயின் தெறி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த 140 அடி கட் அவுட் விழுந்ததில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸானது. தெறி படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தில் நேற்று ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஜங்ஷன், ராம் தியேட்டரில் தெறி படம் திரையிடப்பட்டுள்ளது. தியேட்டர் வாசலில் 140 அடி உயரத்தில் விஜய் கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு கட்-அவுட் திடீரென சரிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மட்டும் சேதமடைந்தது.
பகல் காட்சிக்கு முன்னதாக கட் அவுட் விழுந்திருந்தால், ரசிகர்கள் காயமடைந்திருப்பார்கள். இருசக்கர வாகனங்களும் சேதமடைந்திருக்கும். கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்படும் கட் அவுட்களால், உயிர்களுக்கு ஆபத்து என்பதை ரசிகர்கள் உணர்வது எப்போது.?