சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து பேசப்பட்டவர் ரித்விகா. அதையடுத்து அவரைத்தேடி கதாநாயகி வாய்ப்புகள் சென்றபோதும், கதாநாயகியாக நடிக்கிறேன். ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிசனாக அவர் பேசியதால் அந்த வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு திரும்பி விட்டது. அதனால் பின்னர் அழகுக்குட்டி செல்லம், அஞ்சலா போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த ரித்விகா, தற்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணியின் மகளாக நடித்துள்ளார். அதற்கடுத்து ரஜினி நடித்துள்ள கபாலியில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடித்திருக்கிறாராம்.
ரஜினி படம் என்பதோடு, ஸ்லம் ஏரியா வேடத்தில் அழுத்தமான காட்சிகளில் நடித்திருக்கிறாராம் ரித்விகா. இதற்கு முன்பு காக்கா முட்டை படத்தில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அந்த படம் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்ததால் தனக்கும் இந்த கபாலி படம் கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறாராம் ரித்விகா. அதோடு, இனி வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.