Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை கல்பனா மரணம்!

25 ஜன, 2016 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Actress-Kalpana-passes-away

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை கல்பனா இன்று(ஜன.25ம் தேதி) காலை திடீரென மரணமடைந்தார். ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கில் இருந்த கல்பனாவுக்கு அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கல்பனா, இருதய நோயால் இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983-ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதன்பிறகு காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.


எண்ணற்ற மலையாளப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள நடிகை கல்பனா, நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.50 வயதான கல்பனா, தமிழில் பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜ் மனைவியாக நடித்தார். அந்தப் படத்திற்காக குண்டான கதாநாயகி தேவைப்பட்டது. படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை குண்டாக மாற்றிக் கொண்டு நடித்தவர். அந்தப் படம் அவருக்கு பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அடுத்து பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நாயகனாக நடித்த சதி லீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்த் மனைவியாக நடித்தார். கமல்ஹாசன் நடித்த பம்மல் கே. சம்பந்தம், அழகம் பெருமாள் இயக்கிய டும் டும் டும் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்தார்.


கல்பானா, மலையாளம் இயக்குநர் அனில் குமாரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பால் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். கல்பனாவிற்கு ஸ்ரீமாயி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார்.


மலையாளத்தில் வெளிவந்த தனிச்சல என்ஜன் என்ற படத்திற்காக, 2012ம் ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.


கல்பனாவின் உடல் விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.


கல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.


முன்னதாக கல்பனாவின் மரண செய்தி கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்திக், கோவை சரளா, சதீஷ் உள்ளிட்ட பலர் ஐதரபாத்தில் கல்பனா இருந்த மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தொழில்நுட்பத்தை கத்தி போல் பயன்படுத்தணும் : ஜீவாதொழில்நுட்பத்தை கத்தி போல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

GAYATHRI MEENAKSHI SUNDARAM - Chennai,இந்தியா
25 ஜன, 2016 - 14:25 Report Abuse
GAYATHRI MEENAKSHI SUNDARAM Very good actress, Let us pray for the peaceful soul.
Rate this:
Chowkidar N.Purushothaman - Cuddalore ,இந்தியா
25 ஜன, 2016 - 14:08 Report Abuse
Chowkidar N.Purushothaman ஆழ்ந்த இரங்கல்கள்... சின்ன வீடு படத்தில் இவரின் நடிப்பு ஒரு பதி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு இருந்தது....
Rate this:
k.baskaren - coimbatore,இந்தியா
25 ஜன, 2016 - 12:00 Report Abuse
k.baskaren கல்பனா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
saraathi - singapore,சிங்கப்பூர்
25 ஜன, 2016 - 11:06 Report Abuse
saraathi தமிழகத்தில் ஜல்லி கட்டுக்காக ஆதரவு தெரிவித்து அதை நடத்த ஆயத்தமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கைது சம்பவத்தின் போது கூட அந்த செய்தி ஒரு வரி செய்தியாகத்தான் வெளிவந்தது. இப்பொழுது நடிகையின் இறப்பு செய்தியுடன் ஒரு வரலாறே வெளிவருகிறது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in