சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிடிச்சிருக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் விசாகா சிங். அதன் பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விசாகா, தற்போது 'பயம் ஒரு பயணம்' என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். உன்னைப் போல் ஒருவன், இது கதிர்வேலன் காதல் படங்களில் நடித்த பரத் ஹீரோவாக நடிக்கிறார்.
மணிசர்மா இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: பேய் படங்கள் எண்ணிக்கையில் அடங்கா அளவுக்கு வெளிவந்து உள்ளதையும், வெளி வர உள்ளதையும் நான் அறிவேன். பயம் ஒரு பயணம் மற்ற பேய் படங்களில் இருந்து நிச்சயம் மாறுப்பட்டதாக இருக்கும். பேய் படங்கள் நகைச்சுவை படங்களாகவோ, அல்லது செண்டிமெண்ட் படமாகவோதான் இருக்கிறது. முழுக்க முழுக்க பயமுறுத்தும் படமாக இது இருக்கும்.
பேயாக நடிக்கும் கதாநாயகி கேரக்டருக்கு பலரை சிந்தித்தோம் , சிலரை சந்தித்தோம். கதை கேட்ட மாத்திரத்திலே நடிக்கஒப்புக் கொண்டார் விசாகா சிங். பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை அவர் அகோரப் படுத்த ஒப்புக் கொண்டதே தொழில் மீது அவருக்கு உள்ள மரியாதையை புரிய வைத்தது. என்றார் மணிசர்மா.
ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம், ஜான் விஜய், சிங்கம்புலி, ராம்தாஸ், யோகிபாபு, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைக்கிறார், ஆண்ட்ரிவ் ஒளிப்பதிவு செய்கிறார்.