சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இணையத்தின் பயன்பாடு அதிகமான பிறகு திரைப்படங்களின் ஆடியோ விற்பனை அடியோடு குறைந்துவிட்டது. திரைப்படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்கும் மியூசிக் கம்பெனிகள், ஆடியோ சிடி. விற்பனை மூலம் போட்ட பணத்தில் பாதியைக் கூட எடுக்க முடியாமல் திணறிவருகின்றன. ரிங் டோன் மற்றும் வேறு வழிகளில்தான் லாபம் பார்த்து வருகின்றனர். ஆடியோ சிடி விற்பனையில் லாபம் இல்லை என்றாலும் அதற்கான புரமோஷனை மட்டும் இன்னமும் செய்து வருகின்றனர்.
சில படங்கள் பெரிய அளவில் ஆடியோவுக்கு புரமோஷன் செய்கிறார்கள். தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டிராக் லிஸ்ட்டை மோஷன் போஸ்டர் ஸ்டைலில் வீடியோவாக வெளியிட்டார் தனுஷ். 'விஐபி' படப்பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அந்த ஆல்பம் பாணியிலேயே, உதயநிதி, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'கெத்து' ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் வீடியோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேன்டா' படத்தைத் தொடர்ந்து உதயநிதியுடன் 4வது முறையாக கெத்து படத்தில் இணைந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளி வந்த நண்பேன்டா பாடல்கள் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.