சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு காலத்தில் காதலராக இருந்து பிறகு பிரிந்த சிம்பு நயன்தாரா இருவரும் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்தனர். நயன்தாரா உடன் மீண்டும் 'இணைய' வேண்டும் என்று சிம்பு விரும்பியதை அறிந்து இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்க அரும்பாடுபட்டார் பாண்டிராஜ். இவ நம்ம ஆளு என்று முதலில் டைட்டில் வைக்கப்பட்டது.
சிம்பு தன்னை சொல்வதுபோல் உள்ளதால் அந்த டைட்டிலுக்கு நயன்தாரா எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்தனர். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சிம்பு - நயன்தாரா இடையிலும், சிம்பு - பாண்டிராஜ் இடையிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் படம் முடியாமல் போனது. இப்படத்தின் சில காட்சிகளும், நயன்தாரா நடிக்க வேண்டிய ஒரு பாடலும் இன்னும் படமாக்கப்படவில்லை.
இந்நிலையில், இது நம்ம ஆளு படம் 2016ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. பின்னர்'இது நம்ம ஆளு' படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட சிம்பு திட்டமிட்டிருப்பதாக தகவல்.
இது நம்ம ஆளு படம் முக்கால்வாசிதான் முடிந்திருக்கிறது. பிறகு எப்படி படத்தை வெளியிட முடியும்? பாண்டிராஜ் இயக்கத்தில் உருவானாலும் சிம்புவும் அவரது அப்பாவும் எடிட் செய்து முக்கால்வாசி படத்தை முழுப்படமாக்கிவிட்டனர். அதை வேறு வழியில்லாமல் பாண்டிராஜ் ஒப்புக்கொண்டதால் படம் திட்டமிட்டபடி வெளிவரும் என்கிறார்கள்.