சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் |
தெலுங்கில் செளர்யம், சன்கம் ஆகிய படங்களை இயக்கி விட்டு தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. அந்த படம் ஹிட்டடித்ததை அடுத்து அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர், அதற்கடுத்து வேதாளம் படத்தை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதிலும் வீரம் படத்தைவிட வேதாளம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் மற்ற படங்களை பின் தள்ளி அதிகப்படியாக வசூலித்துக்கொண்டிருக்கிறது.
ஆக, தனது முந்தைய படங்கள் மட்டுமின்றி விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் வசூல் சாதனைகளை வேதாளம் முறியடித்திருப்பதால், அதிக உற்சாகத்தில் இருக்கிறார் அஜித். மேலும், சமீபத்தில் தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், அடுத்து அஜித் நடிக்கும் படத்தை ஏற்கனவே அவரை வைத்து பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதற்காக எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அவர் ஒரு சரித்திர கதையை ரெடி பண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறப் பட்டது.
ஆனால், இப்போது அஜித்தரப்பை விசாரித்தால், மீண்டும் அவர் சிவா இயக்கும் படத்திலேயே நடிக்கயிருப்பதாக கூறுகிறார்கள். வேதாளம் படத்துக்கு கொஞ்சமும் குறையாத மாஸ் கதையில் அந்த படம் உருவாகிறதாம். அதோடு, அஜித்தின் ஆரம்பம், வீரம், வேதாளம் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னமே அந்த படத்தை தயாரிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தை அடுத்தாண்டு துவக்க உள்ளனர். அஜித்தின் கால் பூரண குணமானவுடன் இந்தப்படத்தை தொடங்குகிறார்கள்.