சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய்யின் அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர் பரதன். விஜய் இரண்டு வேடங்களில் நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமையில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் பரதனுக்கு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்தச்சூழலில் மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு பரதனுக்கு கிடைத்துள்ளது.
புலி படத்தின் தோல்விக்கு பின்னர் தற்போது விஜய், அட்லியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். பாதிக்கு மேல் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் 60வது படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. விஜய்க்கு குஷி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் 60வது படத்தை இயக்க போகிறார் என்றும், அது குஷி-2 படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதைஎல்லாம் பொய்யாக்கும் விதமாக விஜய்யின் 60வது படத்தை பரதன் தான் இயக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொமான்ட்டிக் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, மதி ஒளிப்பதிவு செய்ய பர்வீன் படத்தொகுப்பு வேலையை கவனிக்க உள்ளார். ஹீரோயின், இசையமைப்பாளர் உள்ளிட்ட தேர்வு நடந்து வருகிறது. அட்லி படத்தை முடித்த கையோடு பரதன் படத்தில் இயக்க உள்ளார் விஜய்.