அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
சூப்பர் ஸ்டார் நடித்த பழைய படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு வைக்க போட்டிபோடுகிறார்கள். காரணம் அந்த தலைப்புகள் மக்களிடையே நல்ல ரீச் ஆனவை. அதோடு பவர்புல்லானவை. ஒரு புதிய படத்தின் தலைப்பை மக்கள் மனதில் பதிவு செய்ய பல லட்சம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். சில லட்சம் கொடுத்து ரஜினி தலைப்பை வாங்கிவிட்டால் போதும் அந்த செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப் போடுகிறார்கள். மேலும் பொதுவாக ஆக்ஷன் படங்களுக்கு ரஜினியின் எந்த படத்தின் தலைப்பையும் வைக்கலாம்.
இதுவரை வைக்கப்பட்ட ரஜினி பட தலைப்புகளில் ஏவிஎம் நிறுவனம் மட்டுமே தன்னிடம் இருந்த ரஜினி தலைப்புகளை மற்றவர்களுக்கு இலசவமாக கொடுத்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் கொடுத்திருக்கிறது. சில முன்னணி நிறுவனங்கள் 25 லட்சம் வரை வாங்கிக் கொண்டு கொடுத்திருக்கிறது. பாயும்புலி, தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, சதுரங்கம், பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை, தில்லுமுல்லு, கழுகு, நினைத்தாலே இனிக்கும், படிக்காதவன், மாவீரன், ராஜாதிராஜா, மாப்பிள்ளை, பணக்காரன் போன்ற தலைப்புகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு விட்டது.
தற்போது தனுஷ் நடிக்கும் தங்க மகன், ஜீவா நடிக்கும் போக்கிரிராஜா, விஜய்சேதுபதி நடிக்கும் தர்மதுரை படங்கள் தயாரிப்பில் உள்ளது. இவைகள் தவிர மூன்று முடிச்சு, முள்ளும் மலரும், தனிக்காட்டுராஜா, நெற்றிக்கண், தீ, காளி, தர்மயுத்தம், துடிக்கும் கரங்கள், விடுதலை, ஊர்காவலன், மனிதன், தர்மத்தின் தலைவன், தளபதி, மன்னன் ஆகிய டைட்டில்களை பெற இப்போது சிலர் முயற்சித்து வருகிறார்கள்.