சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சல்மான்கான் நடித்துள்ள இந்திப் படமான பிரேம் ரத்தன் தான் பயோ வருகிற தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது. இதில் சல்மான்கானுடன் சோனம் கபூர், நெய்ல் நிதின் முகேஷ், அனுபம்கேர் நடித்துள்ளனர். சூரஜ் ஆர். பர்ஜத்யா இயக்கி உள்ளார். சஞ்சய் சவுத்ரி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், ஹிமேஷ் ரேஷ்மையா பின்னணி இசை அமைத்துள்ளார். வி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சல்மான்கான் நடித்து சூப்பர் ஹிட்டான மைனே பியார் கியா, ஹம் சாத் சாத் ஹெய்ன் பட வரிசையில் வரும் பிரமாண்ட பேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் படம். இந்த படத்திலும் சல்மான்கான் பெயர் பிரேம்தான். ஒரு பெரிய குடும்பத்திற்குள் வரும் ஒரு புதிய உறவால் வரும் மகிழ்ச்சியும் அதை தொடர்ந்து வரும் பிரச்சினைகளும் கதை.
ராஜஸ்ரீ புரொடக்ஷன் தயாரித்துள்ள படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி தெலுங்கு, தமிழில் டப் செய்து வெளியிடுகிறது. தெலுங்கில் பிரேம் லீலா என்றும் தமிழில் மெய்மறந்தேன் பாராயோ என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். மூன்று மொழிகளிலும் தீபாவளியன்று வெளிவருகிறது.