சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் ரஜினிகாந்த்தின் மருமகன் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் அதையும் தாண்டி தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி இருப்பவர் தனுஷ். நடிகராக அறிமுகமான தனுஷ், இன்று தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றாலே அவர்களிடம் விலையுர்ந்த கார்களும் இருக்கும். என்னதான் விலையுர்ந்த கார் இருந்தாலும் உலகின் பெரும் பணக்காரர்கள், நட்சத்திரங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை தான் கவுரவ காராக கருதுகிறார்கள். அந்தவகையில், நடிகர் தனுஷ், இப்போது விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். கருப்பு நிறத்தினாலான இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என்கிறார்கள். மேலும் தனது காருக்கு 106 என்ற நம்பரை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் நட்சத்திரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய் ஆகியோர் மட்டுமே இந்த காரை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போதும் தனுஷூம் இணைந்துள்ளார்.