சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மிளகா படத்தில் நாயகனாக நடித்தவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். அதன்பிறகு ராசுமதுரவன் இயக்கிய முத்துக்கு முத்தாக படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், பின்னர் சதுரங்க வேட்டை, கதம் கதம் ஆகிய படங்களிலும் நடித்தார். இதில் சதுரங்க வேட்டை சூப்பர் ஹிட்டானது. ஆனபோதும் தொடர்ந்து நடிக்காமல் ஒளிப்பதிவு செய்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார் நட்ராஜ். அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்துக்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக தாஜ் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறாராம் நட்ராஜ். இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை போன்று விறுவிறுப்பான திரைக்கதையாம். அதனால் கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து மீண்டும் நாயகனாக அரிதாரம் பூசுகிறாராம் நட்டி.
மேலும், தனக்கு பெரிய கமர்சியல் வேல்யூ இல்லை என்பதால், கதாநாயகியாக யாராவது முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என்று முடி வெடுத்த நட்டி, சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது ராய் லட்சுமியிடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் அகிரா படத்திற்காக மும்பையில் முகாமிட்டுள்ள ராய்லட்சுமி, டிசம்பர் மாதம் சென்னை வந்து நட்டியுடன் டூயட் பாடப்போகிறாராம்.