சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வேதாளம் டீசர் வந்ததால் தூங்காவனம் படத்தின் இரண்டாவது டிரைலரைக் கூட நமது சினிமா ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் வேதாளம் டீசரைத் தள்ளி வைத்து விட்டு மற்ற டீசர் பக்கமும் வாருங்கள் ரசிகர்களே என்று யாராவது வெளிப்படையாக வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு ஆகிவிட்டது.
ஏற்கெனவே, ஒரு காதல் விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நானும் ரௌடிதான் படம் நேற்று வெளியான டீசராலும் பேசப்பட்டு வருகிறது. வெற்றியைப் பற்றி கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வித்தியாசமான படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதியின் மீண்டும் ஒரு வித்தியாசமான படம் என நானும் ரௌடிதான் பட டீசரைப் பார்த்தாலே புரிகிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட ஸ்டைலில் நகைச்சுவை கலந்த ஒரு ரௌடித்தனமான கதாபாத்திரத்தில் நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்று தெரிகிறது. உடல் கொஞ்சம் இளைத்திருந்தாலும் நயன்தாராவின் நடிப்பில் கனம் இன்னும் கூடித்தான் இருக்கிறது. போடா போடி படத்தை எடுத்த விக்னேஷ் சிவன் தயாரிப்பாளருக்காகவும், நாயகனுக்காகவும் இல்லாமல் நயன்தாராவுக்காகவும் இந்தப் படத்தை கண்டிப்பாகச் சிறப்பாக எடுத்திருப்பார் என்றே யூகிக்க முடிகிறது.