சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விக்ரம் பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்தில் நடித்து வரும் ஷாம்லி, அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே அவருக்கு வெயிட்டான வேடங்கள்தானாம். ஏதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் பர்பாமென்ஸ் காட்ட நிறைய வாய்ப்புகள் உள்ளதாம். அதனால் ஓப்பனிங்கிலேயே பெரிய நம்பிக்கையுடன் களம் கண்டுள்ள ஷாம்லி, ஒரே மொழி நடிகையாக இல்லாமல் தென்னிந்திய அளவில் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதன்காரணமாக, தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே காதலோ ராஜகுமாரி என்றொரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அதையடுத்து நடிப்பதற்கும் ஷாம்லிக்காக கதை கேட்டு வரும் அவரது அக்கா ஷாலினி, மலையாளத்திலும் இதே வேகத்தில் தங்கையை இறக்கி விட தனது அபிமானத்திற்குரிய சில மெகாப்பட டைரக்டர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அதனால் தமிழ், தெலுங்கில் நடித்து வரும் படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே மலையாள படத்திலும் ஷாம்லி கமிட்டாகிவிடுவார் என்று தெரிகிறது.
மேலும், ஷாம்லியைப் பொறுத்தவரை அக்காள் ஷாலினியின் பாணியைத்தான் கடைபிடிக்கப் போகிறாராம். அதாவது, கவர்ச்சி விசயத்தில் கணுக்கால்தான் எனது லிமிட் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் ஷாம்லி, அக்கா ஷாலினி நடித்ததை விடவும் அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராகி விட்டாராம். அதனால் தான் சந்திக்கும் டைரக்டர்களிடம் மரத்தை சுற்றி டூயட் பாடும் சராசரி நடிகையாக இல்லாமல், என்னை அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வையுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் ஷாம்லி.