சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு படத்தின் டிரைலருக்குக் கிடைக்கும் வரவேற்பு கூட அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போது அதிகப்படுத்திவிடுகிறது. ரசிகர்கள் எந்தப் படத்தைப் பார்க்க விருப்பமாக உள்ளார்கள் என்பதை 'யு டியூப்'பில் கிடைக்கும் ஹிட்ஸை வைத்து ஓரளவிற்குக் கணித்துவிடலாம். விஜய், அஜித் படங்கள்தான் தற்போது யு டியூப் ஹிட்ஸில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றன. அவர்களிருவரின் படங்கள் வரும் போதுதான் யு டியூபிலும் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.
அதே சமயம், மற்ற நடிகர்கள் நடிக்கும் சில குறிப்பிட்ட படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அப்படி ஒரு எதிர்பார்ப்பை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள படம் '10 எண்றதுக்குள்ள'. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் 4 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நாட்களில் இந்த டிரைலரை யு டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசரை இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களே பார்த்துள்ள நிலையில் டிரைலரை நான்கு நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'10 எண்றதுக்குள்ள' இந்த மாதம் 21ம் தேதி வெளியாகிறது.