கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா |
நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் "அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார். மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.




