சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பலர் விமர்சித்து வந்தாலும், அந்த விமர்சனங்கள் அனைத்தையும் கடந்து தற்போது திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்காரணமாக, கிடப்பில் கிடந்த ஜி.வி.பிரகாஷின் பென்சில் படமும் தற்போது தூசு தட்டப்பட்டிருக்கிறது. அதையடுத்து, நடிப்பில் தடுக்கி விழுந்து மறுபடியும் ஜி.வி. பிரகாஷ் இசைக்கே வந்து விடுவார் என்று எதிர்பார்த்த பலரது கருத்து தவறாகியிருக்கிறது. மாறாக, இந்த படம் மூலமே கோலிவுட்டில் ஒரு மார்க் கெட்டை எட்டிப்பிடித்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இதையடுத்து இதுவரை அப்படம் குறித்து தங்களது கருத்தை வெளிப்படையாக சொல்லாத ஜி.வி.பிரகாஷின் அபிமானிகள் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறனும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது, சினிமாவில் கவர்ச்சி படம், கருத்து படம் என்ற இரண்டுவிதமான பாதை இருக்கிறது. இரண்டு பாதைகளிலும் பயணிக்கலாம். அது அவரவர் விருப்பத்தைப்பொறுத்தது. மேலும், இந்த ஜெனரேசன் கவர்ச்சிகரமான கதைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இந்த படத்தின் வெற்றியிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து, தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக்கொடுத்த இந்த படமும் நல்ல படமே என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.