மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒரு நொடியில். இதில் சிருஷ்டி டாங்கே தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். கே.கோடீஸ்வரராவ் தயாரிக்க எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். தபஸ்ரீ என்ற இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார். இவர்கள் தவிர பிருத்வி, விஜயன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.
500 ஆண்டுகளாக ஒரு கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியவில்லை. மீறி நுழைகிறவர்கள் மாயமாகிவிடுகிறார்கள். அந்த ஊரை ஒரு அபூர்வசக்தி ஆள்கிறது. அந்த சக்தியை தான் அடைய நினைக்கிறான் ஒரு மந்திரவாதி. இதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்கிறான். இதனை ஒரு தொலைக்காட்சி நிருபர் கண்டுபிடிக்கிற கதை.
கதை திகிலாக இருந்தாலும் இயக்குனர் நம்பி இருப்பது கவர்ச்சியைத்தான். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும், அறிமுக ஹீரோயின் தபஸ்ரீயும் போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே பெரிதாக வளராத காலத்தில் நடித்த படம் இப்போது வெளிவர இருக்கிறது.