சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சன்னதி நடிப்பில் நேற்று வெளியான படம் - 'யட்சன்'. பிரபல எழுத்தாளர்களான சுபா, ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடராக எழுதி வந்த கதையைத்தான் விஷ்ணுவர்த்தன் யட்சன் படமாக இயக்கியிருக்கிறார். யட்சன் ஏற்கனவே வெளிவந்த தொடர்கதை என்றாலும், திரைக்கதை எழுதும்போது பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. எனவே யட்சன் படம் வெளியான அன்றே, அதாவது நேற்று 'யட்சன்' படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே காதல்கோட்டை, பாரதிகண்ணம்மா, பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சேது, ராம் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவை எல்லாம் படம் வெளியான பிறகு புத்தகமாக வெளிவந்தவை. ஆனால் யட்சன் திரைக்கதை படம் வெளியாகும் அன்றே வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படம் வெளியாகும் நாளிலேயே அப்படத்தின் திரைக்கதை புத்தமாக வெளியிடுவது இது தான் முதல் முறை.