ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசுவார் இளையராஜா. சமீபத்தில் நடந்த என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற நிகழ்ச்சியில்கூட வைரமுத்துபோன்று மிமிக்கிரி செய்து கவிதை பாடினார். மதுரையில் நடந்த விழா ஒன்றில் பாரதிராஜா, வைரமுத்துவை பற்றி பேச... கோபமடைந்த இளையராஜா பாரதிராஜாவோடு மனக் கசப்பானார். அன்றிலிருந்து இளையராஜா பாரதிராஜாவையும், பாரதிராஜா இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசிவருகிறார்கள்.
தற்போது பாரதிராஜா "வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன், இளையராஜாவை விட இசை பற்றி அதிகம் தெரிந்தவர். பெரிய புத்திசாலி, கர்நாட இசை, மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவர். இசை ஆசிரியர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் உயரத்தை தொட முடியவில்லை. வேதம் புதிது படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அதிலிருந்தே இளையராஜாவுக்கும், எனக்கும் உறவு முறிய ஆரம்பித்தது" என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா குறிப்பிடும் தேவேந்திரன் வேதம் புதிதிற்கு பிறகு ஆண்களை நம்பாதே, கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, மீண்டும் சாவித்திரி, பாலு தம்பி மனசிலே, நானும் என் ஜமுனாவும் உள்பட கடந்த 29 வருடங்களில் 20படங்களுக்கும் குறைவாகவே இசை அமைத்துள்ளார்.