சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
2000 வருடத்தில் பிரபுதேவா நடித்த டபுள்ஸ் என்ற படத்தில் இசையமைப்பாளரானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதையடுத்து குத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சமி ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். இதில் சன் ஆப் மகாலட்சுமி படத்துக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் ஒரு இடம் உண்டு என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், அதன்பிறகு சிவகாசிக்கு படத்திற்கு பிறகு அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் பெரிய ஹிட்டடிக்கவில்லை. அதனால் மார்க்கெட்டில் பின்தங்கினார் அவர்.
இருப்பினும், தனக்கென ஒரு அடையாளத்துடன் அவரும் தற்போது மார்க்கெட்டில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அதோடு, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் பெருமைக்குரிய இசையமைப்பாளராகவும் இருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா. காரணம், தங்களது படங்களின் பட்ஜெட் இதுதான் என்று தயாரிப்பாளர்கள் ஓப்பனாக சொல்லிவிட்டால், அதற்கேற்றவாறு, தனக்கான சம்பளத்தை கூட அந்த பாடல்களுக்காக செலவு செய்கிறாராம். பாடல்களின் தரம் குறைந்து விடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் தேவா செய்யும் இந்த விசயம் இயக்குனர்களுக்கு அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளதாம்.