சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவர் ஜோடியாக ஷாமிலி நடிக்க உள்ளனர். இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஷாமிலியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஜித் மனைவி ஷாலினியின் தங்கையாகத்தான் அவரைப் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இரண்டு வயதிலேயே 'அஞ்சலி' படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து இராம.நாராயணன் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஷாமிலி. டீன் ஏஜ் வயதில் அக்கா ஷாலினி போலவே ஷாமிலியும் நாயகியாக அறிமுகமாக தமிழ்த் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்தனர்.
தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக 'ஓய்' என்ற படத்தில் 2009ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானார். அப்போதே தமிழிலும் நாயகியாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஷாமிலி நாயகியாக அறிமுகமாகாமல் படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். இப்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தனுஷுடன் ஜோடியாக நடிக்க உள்ள படம் மூலம்தான் தமிழில் ஷாமிலி நாயகியாக அறிமுகமாகப் போகிறார்.