மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? |
இந்தக்காலத்தில் ஷங்கர், ராஜமௌலி போன்ற இயக்குநர்கள் பிரமாண்டமான படம் எடுப்பவர்கள் என்றால் அந்தக்காலத்தில் இப்படி எடுப்பவராகப் பி.ஆர்.பந்துலுவைக் கூறலாம்.
பந்துலு இயக்கியவற்றில் பிரமாண்டமான படங்கள் நிறையவே வந்துள்ளன. அவை மீண்டும் இந்தக்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப் பொலிவுடன் வெளியாகி வெற்றியும் பெறுகின்றன. பந்துலு இயக்கிய சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படம் மீண்டும் 50 ஆண்டுகளுக்குப்பின் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. இப்படி மீண்டும் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் சோடை போகவில்லை.
கடந்த வெள்ளியன்று வெளியான சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த அளவுக்கு வரவேற்பு என்றால், சிவாஜி கட்அவுட்டுக்கு மாலை மரியாதை, பாலாபிஷேகம், பத்தாயிரம் வாலா பட்டாசு ,டிராபிக்ஜாம் என்று சாந்தி தியேட்டரே திமிலோகப்பட்டது.
நாம் இருப்பது 2015-லா 1959-லா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிவாஜி பக்தர்கள் கலக்கி வருகிறார்கள். பாகுபலி காலத்திலும் பந்துலுவுக்கு உள்ள மவுசு ஆச்சரியப்பட வைக்கிறது.