மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
நடிகை சினேகாவுக்கு நேற்று இரவு 1.55 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். தொடர்ந்து கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சினேகாவுக்கு வளைகாப்பும் நடந்தது.
இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வழியில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு 1.55 மணியளவில் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 2.08 கிலோ இருப்பதாகவும், தற்போது சினேகாவும், குழந்தையும் நன்றாக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.