சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகின்றது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவான ஸ்ரீமந்துடு திரைப்படம் செல்வந்தன் என்ற பெயரில் கோலிவுட்டில் திரைக்கு வந்து தமிழ் ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் செல்வந்தன் படத்தை கேரளாவில் திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் டப்பிங்க்கான செல்வந்தன் படத்தை கேரளாவில் திரையிடவுள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் மகேஷ் பாபுவிற்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். டோலிவுட்டில் தோல்வியைத் தழுவிய மகேஷ் பாபுவின் நம்பர் 1 திரைப்படம் கேரளாவில் சொல்லும்படியான வசூலைக் கொடுத்தது. அந்த வகையில் செல்வந்தன் படத்தை கேரளாவில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.