சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் யட்சன் . ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யட்சன் என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.
விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது " இது ஆரம்பம் படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் நன்றாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை. தி.நகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.
ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம். ஸ்டண்ட் சில்வா, ஆர்ட் லால்குடி இளையராஜா ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர். அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார். நான் எப்போ படம் தொடங்கினாலும் அம்மா, உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள். அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.
யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரிய பலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியாக போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது. படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது என்றார்.