சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் சென்ட்ராயன். இவர் காமெடி மட்டுமின்றி கேரக்டர்கள் ரோல்களிலும் நடிப்பதால், பத்து படங்கள் என்றால் அதில் 8 படங்களில் இருக்கிறார். அதோடு, சம்பள விசயத்தில் கெடுபிடி செய்யாமல் கம்பெனிகளைப் பொறுத்து அனுசரித்து வாங்கிக்கொண்டும் வருகிறார். அதனால்தான், பெரும்பாலான படங்கள் இவர்கள் நடித்து வருகிறார். சென்ட்ராயன் சரியான கேரக்டர்கள் கிடைத்தால் கெட்டப்பை மாற்றி நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி வந்தார். அப்படி அவர் தனது கெட்டப்பை மாற்ற வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறதாம். பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் லவ் குரு படத்தில் சென்ட்ராயனும் ரொமான்ஸ் செய்கிறாராம். ஆனால், அவர் தலைநிறைய முடி வைத்திருப்பது நெகட்டிவாக அவரை காட்டுவதால், அவரது தலைமுடியை கத்தரித்து விட்டு, மென்மையான தோற்றத்துக்கு மாற்றியிருக்கிறார்களாம். அதனால் இந்த படத்தில் இருந்து எனது கெட்டப் முற்றிலுமாக மாறிவிடும் என்று கூறும் சென்ட்ராயன், இனி கதாபாத்திரங்களுக்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டேயிருக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் அவர்.