சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாளத்தில் குங்குமப்பூ என்ற சின்னத்திரை சீரியல் மூலம் புகழ் பெற்றவர் ஆஷா சரத். அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அந்தப் படம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனபோது அதிலும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் நாட்டிலும் புகழ்பெற்றார். தற்போது தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.
ஆஷா சரத் ஒரு மலையாள தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப், டுவிட்டரில் கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பரவி வருகிறது. "அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என் வளர்ச்சியை கெடுக்க யாரோ என் பெயரை பயன்படுத்துகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது" என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவனந்தபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.