Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தரமணியை எதிர்பார்க்கும் யுவன்ஷங்கர்ராஜா!

24 ஜூலை, 2015 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Yuvan-Sankar-Raja-expects-Tharamani-movie

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் வெற்றிபெறவில்லை. என்றபோதும், அந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. பின்னர் தனது 100வது படமான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. அவரது பாடல்களும் ஹிட்டாகவில்லை. இதனால் அது மனதளவில் யுவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அதற்கடுத்து யட்சன், இடம்பொருள் ஏவல், தரமணி, கான், ஓம் என பல படங்கள் கைவசம் இருந்ததால் அந்த படங்களில் கவனத்தை திருப்பினார்.


முக்கியமாக, ராம் இயக்கும் தரமணி படத்தை அடுத்தபடியாக பெரிதாக எதிர்பார்க்கிறாராம் யுவன். காரணம். இதற்கு முன்பு ராம் இயக்கி நடித்த தங்கமீன்கள் படம் யுவனுக்கு நல்ல பெயரை கொடுத்ததோடு, அந்த படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் -என்ற பாடல் பாடலாசிரியர் முத்துக்குமாருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. அதனால், இந்த தரமணி படத்தை முக்கியமான படமாக கருதும் யுவன், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் பின்னணி இசையமைக்கும் வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)