சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கொலவெறி அனிருத் சமீபகாலமாக மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விஜய், அஜித் என்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தார். அதோடு, அடுத்த கட்டமாக ரஜினியின் புதிய படவாய்ப்பையும் கைப்பற்றி நம்பர்-ஒன்னாகி விட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்து வந்தது.
அதற்கான முயற்சியில் அவர் திரைக்குபின்னால் இறங்கினபோதும், ஏ.ஆர்.ரகுமானே சமீபகாலமாக ரஜினி படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்ததால் ரஜினி தரப்பில் அவருக்கு சாதனமாக கிரீன் சிக்னல் விழாமல் இருந்தது. ஆனபோதும், காலநேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார் அனிருத்.
இந்த நேரத்தில்தான், லிங்கா கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, ரஜினிக்கு பழைய கூட்டணியில் இருந்து விடுபட்டு ஒரு புதிய கூட்டணி அமைத்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால்தான்தற்போது இளவட்ட இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், எனது முந்தைய படங்களான அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ராசியான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அவர் பெயரை ரஞ்சித் முன்மொழிந்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே ஓகே சொல்லி விட்டாராம் ரஜினி.