ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
இப்போது இளவட்ட நாயகர்களில் ஒருவர் இன்னொருவர் படங்களில் தோன்றி நடித்து உதவி வருகிறார்கள். இது இளைய தலைமுறையின் ஆரோக்கியமான போக்காக இருக்கிறது. இதே போக்கு இசையமைப்பாளர்களிடமும் வந்துள்ளது நல்ல அறிகுறியாகும். அனிருத் பிறரது இசையில் பாடுகிறார். தேவாவும் இளைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவருகிறார். இப்போது ஒரே படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பாடியுள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்.
புதுமுக இசையமைப்பளர் நவீன் இதுவரை கல்யாண சமையல் சாதம் என்கிற ஒரு படம்தான் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைக்கும் இரண்டாவது படம் வில் அம்பு வழக்கு எண் ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார்கள். சுசீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நவீன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜி.வி.பிரகாஷ் ,அனிருத், டி.இமான் மூன்று பேரும் ஆளுக்கொரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார்கள். மூன்றும் மூன்று விதத்தில் ரசிகர்களைக் கவரும்படி இருக்குமாம்.