சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்சினிமாக்களின் டீசர் மற்றும் டிரைலர்களுக்கு இங்கே கிடைக்கும் ஹிட்ஸ்தான் ஒரு படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு எந்தளவுக்கு உள்ளது என்பதற்கான அளவுகோலாக மாறிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கணக்கிடும் கருவியாக கருதப்படும் யூடியூபில் இதுவரை அதிக பட்ச ஹிட்ஸ் கிடைத்த படங்கள் என்றால் 3 தமிழ்ப் படங்கள் மட்டுமே....
ஷங்கரின் ஐ.படத்தின் டீஸர் 1 கோடியே 10 லட்சத்தையும், டிரைலர் 84 லட்சத்திற்கு மேற்பட்ட ஹிட்ஸ் பெற்றது.
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் டீஸர் 53 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.
ரஜினியின் 'லிங்கா' டிரைலர் 52 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.
தற்போது விஜய் நடித்து வரும் 'புலி' டீஸரும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது.
கடந்த 21ஆம் தேதி வெளியான 'புலி' டீஸர் 13 நாட்களில் 50 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.
இந்த ஒரு சாதனை மட்டுமின்றி 'ஐ' பட டீஸர் மற்றும் டிரைலர் பெற்ற லைக்குகளையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது - 'புலி' டீஸர். 'ஐ' படத்தின் டீஸர் 48 ஆயிரம் லைக்குகளையும், டிரைலர் 53 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருந்தன.